Job | ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!! இந்த தகுதி இருந்தாலே போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) டெக்னீஷியன் பதவிக்கு 9,000 வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப நடைமுறை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Technician Grade – I (Signal) – 1092 பணியிடங்கள் மற்றும் Technician Grade – III – 8052 பணியிடங்கள் என மொத்தம் 9,144 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் டெக்னீஷியன் பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். SC/ST, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

டெக்னீசியன் கிரேடு I சிக்னல் பதவிக்கு 18 முதல் 36 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். டெக்னீசியன் கிரேடு III பணிக்கு, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு? : டெக்னீசியன் கிரேட் – I சிக்னல் பணிக்கு மாதம் ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். அதேபோல் டெக்னீசியன் கிரேட் – II பணிக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிய : https://www.rrbcdg.gov.in/uploads/Detailed%20CEN%2002-2024%20(English).pdf

Read More : குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது அரிசி விலை..!! இல்லத்தரசிகள் நிம்மதி..!!

Chella

Next Post

34 ஆண்டுகால பயணம் முடிவு!… 91 வயதில் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

Wed Apr 3 , 2024
Manmohan Singh: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின் அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் தான் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமராவார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் […]

You May Like