மதுரையில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அந்த மாநாட்டில் பேசிய கழகத் தலைவர் விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலினை “ஸ்டாலின் அங்கிள் – வெரி ராங் அங்கிள்” என விமர்சித்தார். “மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜயின் இந்தக் கருத்துக்கள் குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு பல முறை சென்று இருக்கிறேன். அப்போது நானே ‘வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க’ என்பேன். ‘அங்கிள்’ என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக தோன்றவில்லை” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இயக்க நான் தயாராக இருக்கிறேன். அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் வருவது உண்டு, அந்த காலம் படம் வெளியான பிறகு விமர்சனங்கள் பேச வாய்ப்பில்லை தற்பொழுது கலவையான விமர்சனங்கள் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இதில் படத்தின் முடிவில் எவ்வளவு கலெக்சன் என்பது தான் தீர்மானிக்கும் என்றார்.
Read more: ராகு சஞ்சாரம்.. பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!