2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும். மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.
மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12-ம் மாணவர்களுக்கு மார்ச் 27 முதலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.7-ம் தேதி முதலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், 1-9-ம் வகுப்பு வரை ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



