Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு எப்பொழுது இடைத்தேர்தல்…? மக்கள் மத்தியில் எழுந்த கேள்வி…!

விக்கிரவாண்டி தொகுதிக்கு மீண்டும் எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. அவருக்கு ஒரு மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான புகழேந்தி போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோல்வியை தழுவினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் திமுகவில் அனுபவம் மிக்க அரசியல்வாதியான அவரது இறப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விக்கிரவாண்டி தொகுதிக்கு மீண்டும் எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

Court: ஜாபர் சாதிக் தொடுத்த வழக்கு... வீட்டின் சீல் அகற்றம்...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sun Apr 7 , 2024
டெல்லி பாட்டியாலா நீதிமன்ற உத்தரவின்படி, மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்குப் போடப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டுள்ளது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, ஜாபர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்றும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையின் […]

You May Like