இஸ்ரேல் – ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்..? டிரம்ப் சொன்ன பரபரப்பு தகவல்..!

donald trump new

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், இந்த முடிவு தனியாக அவர் எடுக்கும் ஒன்று அல்ல என்றும், பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து “பரஸ்பரமாக” எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தானும், நெதன்யாகுவும் இல்லையெனில் ஈரான் இஸ்ரேலை முழுமையாக அழித்திருக்கும் என்றும் அவர் கூறினார்.


மேலும் பேசிய டிரம்ப், ஈரான் இஸ்ரேலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அழிக்க திட்டமிட்டிருந்தது என்றும், ஆனால் தாம் மற்றும் நேதன்யாகு இணைந்து செயல்பட்டதால் அந்த திட்டம் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். “இஸ்ரேலை அழிக்க விரும்பிய ஒரு நாட்டை நாங்கள் இணைந்து தகர்த்துவிட்டோம்,” என்று கூறினார்..

ஈரானுடன் நடைபெறும் போர் எப்போது முடியும் என்பதை தனியாக தான் தீர்மானிப்பாரா அல்லது நெதன்யாகுவும் அதில் கருத்து தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அது பரஸ்பரமான முடிவு… கொஞ்சம் அப்படித்தான். இதைப்பற்றி நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

மேலும், அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்திய பிறகும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான போரைக் தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அது அவசியமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

பிப்ரவரி 28 தாக்குதல்

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்..

இந்த போரின் தாக்கம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய கட்டமைப்புகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பஹ்ரைன் அரசு, குடிநீர் தயாரிக்க முக்கியமான உப்பு நீரை சுத்திகரிக்கும் நிலையங்களில் ஒன்றை ஈரான் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளது. இதே நேரத்தில் Tehran நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு எண்ணெய் கிடங்குகள் எரிந்து கொண்டிருந்ததாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபு லீக் ஈரான் மீது விமர்சனம்

பிராந்தியத்தில் கோபம் அதிகரித்து வரும் நிலையில், அரபு லீக் அமைப்பின் தலைவரும் ஈரானை கடுமையாக விமர்சித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் “பொறுப்பற்ற கொள்கை” காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வளைகுடா நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்பட்டுள்ளன. போரின் ஒன்பதாவது நாளில், அமெரிக்க இலக்குகளை மேலும் தாக்குவோம் என்று ஈரான் அதிபர் உறுதி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் இந்த போரின் காரணமாக முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு ராணுவ ஏவுகணை குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் இந்தியர் மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 12 பங்களாதேஷ் நாட்டினர் காயமடைந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் நடந்த இந்த போரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குடியேறிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போரை தொடர உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இருவரும் ஈரானுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த போரின் நோக்கம் குறித்து அமெரிக்கா வெளியிடும் தகவல்கள் பல்வேறு வகையில் மாறி வருகிறது. இந்த போர் முடிந்த பிறகு ஈரானில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தன்னுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். “என் அனுமதி இல்லாமல் புதிய தலைவர் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது,” என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தரப்பில், போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் Hezbollah அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்திய தாக்குதல்களில் இரண்டு இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்புகள்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய விமானத் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த போரில் இதுவரை பெரிய அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரானில் குறைந்தது 1,230 பேர், லெபனானில் 397 பேர் மற்றும் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மார்ச் 1 அன்று Saudi Arabiaவில் உள்ள அமெரிக்க படையினருக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஒரு அமெரிக்க ராணுவ வீரர் பின்னர் உயிரிழந்தார். இதனால் இந்த போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 7-ஆக உயர்ந்துள்ளது.

Read More : வருடத்திற்கு ரூ. 1000 செலுத்தி ரூ. 20 லட்சம் காப்பீட்டைப் பெறலாம்..! SBI-யின் ஒரு சிறந்த திட்டம்..!

RUPA

Next Post

பெரும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை.. சில நொடிகளில் ரூ.9 லட்சம் கோடி காலி..!

Mon Mar 9 , 2026
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச் சந்தை தொடங்கிய ஐந்து வினாடிகளுக்குள் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடியை இழந்தனர். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவது பங்கு சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான பதட்டங்கள் இப்போது ஆபத்தான திருப்பத்தை எடுத்துள்ளன. இது உலகப் பொருளாதாரத்திலும் நமது பணப்பைகளிலும் நேரடி தாக்கத்தை […]
stock market 1 1 1

You May Like