கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது.
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் S.I.R. தொடக்கம்.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..



