இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த நகரம், இந்தியாவின் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.. மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த இறப்புகளில் 462 அதாவது சுமார் 86% விபத்துகள் நேரான சாலைகளில் நிகழ்ந்தன.
நகரத்தின் நீண்ட, திறந்தவெளி பகுதிகள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான குருட்டு வளைவுகள் இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல ஊக்குவிக்கிறது. பாலங்கள் நிறைந்த நெடுஞ்சாலை, அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. “வரம்பை மீறிய வேகம் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய குற்றவாளிகளாகக் குறிப்பிடப்படுகின்றன,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாலங்களில் ஏற்பட்ட விபத்துகளும் அதிகமாக நடந்துள்ளது. 77 விபத்துக்கள் 41 உயிர்களை காவு வாங்கின.. போக்குவரத்து விளக்குகள் உள்ள சாலைகளில் 21 இறப்புகளும், காவல்துறையினரால் நிர்வகிக்கப்படும் பகுதிகளில் 32 இறப்புகளும், கட்டுப்பாடற்ற சாலைகளில் 205 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த தரவரிசையில், கட்டுப்பாடற்ற சாலைகளில் ஏற்படும் இறப்புகளில் அகமதாபாத் நாடு முழுவதும் 5வது இடத்தில் உள்ளது.
938 இறப்புகளுடன் டெல்லி முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 793 இறப்புகளுடன் பெங்களூருவும், 718 இறப்புகளுடன் ஜெய்ப்பூரும் உள்ளன. 535 சாலை இறப்புகளுடன் அகமதாபாத் 5வது இடத்தில் உள்ளது.. மும்பை (336), இந்தூர் (258), டெல்லி (241), மற்றும் பெங்களூரு (241) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.. இந்த விவரங்கள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க கடுமையான அமலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.