வெளுத்து வாங்கும் கனமழை!… நீரில் மூழ்கிய விமான நிலையம்!… கடலில் செல்வதுபோல காட்சியளிக்கும் அவலம்!

Dubai Airport: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக துபாய் விமான நிலையம் நீரில் மூழ்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று காலையில் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை இன்றுவரை நீடிக்கும் என ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்ததால் அவை மூடப்பட்டுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

மழைநீரில் விமானங்கள் செல்வது, கடலுக்குள் செல்வதுபோல் காட்சியளிக்கிறது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு செல்ல சாலைக்கு பதிலாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Readmore: மக்களவை தேர்தல்!… இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Kokila

Next Post

Covai: CM ஸ்டாலின் மீது FIR போட்டு உள்ளே தள்ள வேண்டும்...! அண்ணாமலை அதிரடி கருத்து...!

Wed Apr 17 , 2024
நான் தமிழகத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து இருந்தால் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே வைத்திருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வதம்பச்சேரியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த பெண்மணி ஒருவர் ஜி.எஸ்.டி, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர்; முதல்வர் ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்., போட்டு […]

You May Like