யாரெல்லாம் செல்போனை கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம்..? ரூ.5 கட்டணம் வசூலிப்பது ஏன்..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!!

tvk ramesh

தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது.


சுவாமி சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ மற்றும் ரீல்ஸ் பதிவிடுவது, செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளால் வழிபாட்டுச் சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காகப் பிரத்யேக பாதுகாப்பு கவுன்ட்டர்கள் மற்றும் நவீன லாக்கர் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு செல்போன் ஒன்றுக்குப் பாதுகாக்கக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், “இது கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் விதிக்கப்பட்டதல்ல; லாக்கர் பராமரிப்பு, பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மென்பொருள் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட மட்டுமே இந்தக் கட்டணம் பெறப்படுகிறது” என கூறியுள்ளர்.

சில கோயில்களில் செல்போன்களை ஒப்படைக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் கவுன்ட்டர்களை உடனடியாக திறந்து கொள்ள அந்தந்த கோயில் நிர்வாகங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கேமரா மற்றும் வீடியோ வசதிகள் இல்லாத சாதாரண அடிப்படை பட்டன் போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல எவ்வித தடையும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உள்ளூரில் வசிப்பவர்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் தங்கள் செல்போன்களை அறைகளிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு வருவதன் மூலம் கவுன்ட்டர்களில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். திருக்கோயில்களின் பாரம்பரியம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கப் பக்தர்கள் அனைவரும் இந்த மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Read More : ஆடு, சேவல் சண்டையை கண்காணிப்பது தான் உங்க வேலையா? டிஜிபிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

Next Post

பெருமாள் அருள் தரும் துளசி வழிபாடு! துளசி பறிக்கும் போது உச்சரிக்க வேண்டிய சக்திவாய்ந்த மந்திரம்!

Wed Sep 2 , 2026
இந்து தர்மத்தில் துளசி தேவி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றி வழிபடப்படுகிறார். துளசிச் செடியை வீடுகளில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பரிபூரண அருளும், அன்னை மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தடையின்றி முழுமையாகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும். இதன் காரணமாகவே, பல குடும்பங்களில் அதிகாலை வேளையில் துளசி மாடத்திற்குத் தீபமேற்றி, வலம் வந்து வழிபடுவதையும், துளசி தளங்களைப் பறித்துப் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு மாலையாக […]
tulsi

You May Like