தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..? மக்களின் தீர்ப்பு என்ன..? இன்று வாக்கு எண்ணிக்கை..!

stalin eps vijay

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன..


தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது..

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவியது.. இந்த சூழலில் விஜய்யின் தவெக புதிதாக களத்தில் இறங்கி உள்ளதால் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்..? எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று கணித்துள்ளன.. ஒரே ஒரு கருத்துக்கணிப்பில் மட்டும் விஜய் ஆட்சி அமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.. சில கருத்துக்கணிப்புகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது..

எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்குமா..? அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா அல்லது விஜய் ஆட்சியை பிடிப்பாரா..? அல்லது எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா..? என்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துவிடும்…

இன்று வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் காலை முதல் பரபரப்பாக இருக்கும்.. இதை ஒட்டி தமிழக காவல்துறையின் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.. மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் ஏந்திய படி பணியில் உள்ளனர்..

RUPA

Next Post

மாலை நேரத்தில் புயல்.. சிவன் வடிவில் காட்சி தரும் மலை.. கொண்டரங்கியின் ஆன்மீக அதிசயம்..!

Mon May 4 , 2026
Storm in the evening.. A mountain that appears in the form of Shiva.. The spiritual miracle of Kondarangi..!
kondarangi hill

You May Like