பிஎம் கிஷான் உதவித்தொகையின் 20வது தவணையை வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள சிறு குறு விவாசயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) திட்டம் மத்திய அரசால் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நலிவடைந்த விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் என 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளாக தொகை வழக்கப்பட்டுள்ளது. 19வது தவணை மூலம் 10, 04, 67,693 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 20வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பிஎம் கிஷான் உதவித்தொகையின் 20வது தவணையை வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி பிரதமர் மோடி விடுவிக்கிறார். உத்திரபிரதேசம் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 9.7 போடி பயனாளர்களின் வங்கி கணக்கில் தலா 2000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பெற உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.