நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும்.
அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை குறியீடு மற்றும் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் மொத்த விற்பனை விலைக்குறியீடு (-) 3.13% ஆகவும், உணவுப் பொருள் சாராத பொருட்களின் குறியீடு (-) 1.73% ஆகவும் குறைந்துள்ளது.
இந்த மொத்த விற்பனை விலை குறியீட்டெண்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் தொகை மாதந்தோறும் 14-ம் தேதி வெளியிட்டு வருகிறது. இந்த மொத்த விற்பனை விலை குறியீட்டெண் பல்வேறு நிறுவனங்களின் தரவுகளை ஆதாரமாகக் கொண்டும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளின் தரவுகளை ஆதாரமாகக் கொண்டும் கணக்கிடப்பட்டு வருகிறது.



