கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்..
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. சென்றது ஏன்? இரவில் ஏன் உடற் கூராய்வு செய்யப்பட்டது? முதலமைச்சர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என பல் கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் “ கரூர் – கள்ளக்குறிச்சி இரண்டு சம்பவங்களும் ஒன்றல்ல.. கள்ளச்சாராய்ம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்டதால் அங்கு செல்லவில்லை.. ஆனால் கரூர் பெருந்தூயரத்தில் உயிரிழந்த அனைவரும் அப்பாவிகள் மிதப்பட்டு இறந்தவர்கள்..” என்று தெரிவித்தார்.
மேலும் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் அரசு அதிகாரிகள் முன்பே பேட்டிக் கொடுத்தது ஏன்? என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் “ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அரசு அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா? சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால் தான் அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர்.. அதிலும் அவர்கள் அரசியல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை.. அலுவல் ரீதியாகவே அவர்கள் பதில் கூறினர்.. வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியலாக்கி வதந்தி பரப்பப்பட்டது, அதை முறியடிக்கவே அரசு சார்பில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்..