தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாக்குப்பதிவு செய்தனர்.. நடிகர்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்..
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தி.நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்தார்.. அப்போது மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.. மேலும் அங்கிருந்த ஊடகத்தினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..
அப்போது பேசிய அவர் ” வெயில் காலத்தில் வயதானவர்களுக்கு தனி க்யூ ஏன் அமைக்கவில்லை.. எல்லோரும் ஒரே க்யூவில் நிற்க வேண்டும் என்று சட்டமா? வயதானவர்கள் உடனடியாக வாக்களிக்க உரிய வசதிகள் செய்துதரவில்லை என்று ஊடகங்கள் ஏன் செய்தி போடவில்லை? யாருக்கு பிரபலம் இருக்கு அதை எடுத்து போடும் ஊடகங்கள் இதை ஏன் செய்தியாக்கவில்லை.. நான் கேள்வி கேட்பேன்.. நான் பேசுவேன்..” என்று ஆவேசமாக பேசினார்.. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.ச்



