ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கணவன் எதிர்பாராத நேரத்தில் வீடு திரும்பியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், வீட்டின் பின்புறம் சென்று நிலைமையை கவனிக்க முயன்றுள்ளார்.
அப்போது ஜன்னல் மற்றும் குளியலறை வழியாக பார்த்தபோது, தனது மனைவியுடன் இரண்டு இளைஞர்கள் முகம் சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபட்டதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், அங்கிருந்த பெண்ணையும் இரண்டு இளைஞர்களையும் பிடித்தனர். அந்த இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற முயன்ற நிலையில், அவர்களை தடுத்து விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது இளைஞர்கள் இருவரும் அவரது கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கணவன் எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு திரும்பியதால் கள்ளக்காதல் தொடர்பான விவகாரம் வெளியே வந்த சம்பவம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “ஒரு பைசாவைக் கூட தொடமாட்டோம்!”… சட்டப்பேரவையில் விஜய் ஆவேசம்; திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!



