Bank | மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் இயங்குமா..? இயங்காதா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது. முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் கட்டாயம் வேலை செய்யும். அந்த வகையில், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஆண்டின் கடைசி நாளாகும்.

இந்நிலையில், வருகிற மார்ச் 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், இந்த நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டுமே செயல்படவுள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : ”சிக்கல் மேல் சிக்கல்”..!! MLA பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா ஓபிஎஸ்..?

Chella

Next Post

பெங்களூர் குண்டு வெடிப்பு...! குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்ததாக NIA அதிர்ச்சி தகவல்...!

Sat Mar 23 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஷிமோகாவை சேர்ந்த முஸாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக NIA தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் சமிபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், […]

You May Like