தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.. இதனால் குடிமகன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.. தேர்தல் பரப்புரையில் கூட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் வகையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு பாடி விஜய் விமர்சித்தார்..
இதை தொடர்ந்து விஜய் முதல்வரானதும் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தார்.. அதன்படி டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் கடைகளை கண்டறிந்து அறிக்கை கொடுத்த உளவுத்துறைக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டது.. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது..
இந்த நிலையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முறை ஒழிக்கப்படுமா என்பது குறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்தார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதன்முதலில் கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து அமைச்சரானது நான் மட்டும் தான்.. எனக்கு வாய்ப்பு கொடுத்த முதல்வர் விஜய்க்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி.. கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் மாதிரி நாங்கள் இருக்க மாட்டோம்.. மக்களின் பணத்தை தனிநபரின் கைகளுக்கு போகவிடமாட்டோம்.. அது கண்டிப்பாக அரசின் கஜானாவுக்கு வரும்.. அந்த பணம் மக்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும்..
என் மீது வைத்துள்ள நம்பிக்கையில் முதல்வர் மதுவிலக்கு துறையை எனக்கு ஒதுக்கி உள்ளார்.. நான் நிச்சயம் இந்த துறையில் ஊழல்கள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.. முதல்வரின் நம்பிக்கை நிறைவேற்றுவேன்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது நிச்சயம்.. ஒழிக்கப்படும்.. ஒரு மிகப்பெரிய புரட்சி, ஒரு மாற்றம் இங்கு நடக்கும்.. தவெக ஆட்சியில் முதல்வர் விஜய்யின் தலைமையில் அந்த மாற்றம் நடக்கும்.. இதற்கு முன்பு இருந்த மாதிரி இந்த துறை இனி இருக்காது.. மக்களுக்கு இடையூறாக இருக்கும் மாதிரி இந்த துறை இருக்காது..
22 ஆண்டுகளாக நான் தளபதியை ஃபாலோ பண்ணி வருகிறேன்.. அப்படி நல்லவர் ஒருவரை பின்பற்றினால் இந்த நிலைமைக்கு வர முடியும். என்னை மாதிரி ஒரு சாமனியனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : மீண்டும் உயிர்கொல்லி எபோலா பரவல்.. நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை.!



