அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் மனதிலும் இருக்கிறது.. அப்படி ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேறும்..
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற அடிப்படையில் அது எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் முழு மனதுடன் வரவேற்கிறேன். அதற்கு ஒத்துழைப்பு தருகிறேன்.. இபிஎஸ் பிரச்சனை குறித்து அவரிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. கட்சி இணைவதில் என்னை பொறுத்தவரை நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.. கூட்டணி தொடர்பாக அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை.. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. கட்சி ஒன்றிணைந்தால் இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “ பல பிரச்சனைகளை பேச வேண்டி உள்ளது.. 6 வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அந்த வழக்குகள் எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படை.. அதெல்லாம் நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்று டிடிவி தினகரனின் கருத்தை வரவேற்றார்.. அவர் கூறியது ஆழமான, சரியான கருத்து தான் என்று தெரிவித்தார்..
Read More : செப். 13. அன்று திருச்சியில் ஆட்டத்தை தொடங்கும் விஜய்..! 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..