BREAKING | ’உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வீர்களா’..? மார்ச் 21ஆம் தேதி 5 மணி வரை டைம்..!! கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!!

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால், எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் எஸ்.பி.ஐ. வைத்திருக்கக் கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடனே தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : BIG BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

Chella

Next Post

Drugs | ஜாபர் சாதிக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!! வலையில் சிக்கும் முக்கிய புள்ளி..!!

Mon Mar 18 , 2024
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கிடம் சென்னையில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்தனர். இதுவரை டெல்லியில் நடந்து வந்த விசாரணையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் […]

You May Like