டிரம்புடனான சந்திப்பில் இந்த முறை ஜெலென்ஸ்கி “சூட்” அணிவாரா?. உக்ரைன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய வெள்ளை மாளிகை!.

zelensky trump

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை.


இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று திங்கள் கிழமை அமெரிக்க அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முக்கியமான கூட்டத்தில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொண்டதாகவும் மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டத்திற்கு முன்பு, ஜெலென்ஸ்கி சூட் அணிந்திருப்பது தொடர்பான பிரச்சினை மீண்டும் தலைப்புச் செய்திகளில் வந்துள்ளது.

இந்த முறை ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கி சூட் அணிவாரா என்று அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனிய பிரதிநிதிகளிடம் கேட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் ஆக்சியோஸிடம் தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் டிரம்புடனான அவரது கடைசி சந்திப்பின்போது, ஜெலென்ஸ்கி இராணுவ பாணி உடை அணிந்து சென்றது பேசுப்பொருளாக மாறியது. பிபிசியின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம், “நீங்கள் ஏன் சூட் அணியக்கூடாது? உங்களிடம் சூட் இல்லையா? இது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் கண்ணியத்திற்கு அவமானம்” என்று கேட்டிருந்தார்.

அப்போது ஜெலென்ஸ்கி, போர் முடிந்ததும் “சூட்” அணிவேன் என்று பதிலளித்திருந்தார். இதன் பிறகு கூட்டத்தில் மரியாதை மற்றும் நன்றியுணர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே சூடான விவாதம் நடந்தது, மேலும் ஓவல் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

அதேபோல், இந்த முறை சந்திப்புக்கு முன்பு, ‘ரியல் அமெரிக்காவின் குரல்’ பத்திரிகையின் தலைமை வெள்ளை மாளிகை நிருபரும் குடியரசுக் கட்சி எம்.பி. மார்ஜோரி டெய்லர் கிரீனின் கூட்டாளியுமான பிரையன் க்ளென் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அதாவது டிரம்புடனான சந்திப்பில் அவர் சூட் அணிவாரா? என்று கேள்வி எழுப்பினார்,

ஆனால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த முறை அதிகாரப்பூர்வ சூட் மற்றும் டைக்கு பதிலாக கருப்பு ஜாக்கெட்டை அணிந்து டிரம்பை சந்தித்துள்ளார். ஏப்ரல் மாதம் வட்டிக்கானில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கும், ஜூன் மாதம் நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்கும் அவர் அணிந்திருந்தது மிகவும் சாதாரண உடையாக தோன்றியது குறிப்பிடத்தக்கது.

Readmore: 63 பேர் பலி.. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் நிலைகுலைந்த ஜம்மு காஷ்மீர்..!

KOKILA

Next Post

"மோசமான சாலைக்கு சுங்க கட்டணம் எதற்கு..?" – உச்சநீதிமன்றம் அதிரடி...!

Tue Aug 19 , 2025
"How is it fair to charge tolls on bad roads?" - Supreme Court asks tough question
toll

You May Like