50 கி.மீ வேகத்தில் காற்று… சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை…!

cyclone rain 2025

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங் கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 19, 20-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 80 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 20-ம் தேதி வரை அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?. இந்த புற்றுநோயில் இருந்து தப்பிக்கவே முடியாது!. ஆய்வில் அதிர்ச்சி!

Fri Jul 18 , 2025
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள […]
morning wake up cigarette 11zon

You May Like