ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அருகே ஐஏஎஸ் அதிகாரி சின்ன ராமுடுவின் மகள் மாதுரி சாஹிதிபாய் (27). இவர் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றது. அதன்பின்னர் பிறந்த வீட்டில் பணம் நகைகளை வாங்கி வரும்படி மாதுரியை கணவர் ராஜேஷ் துன்புறுத்தியுள்ளார்.
மகளுக்கு நடக்கும் கொடுமையை அறிந்த தந்தை மகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாதுரி சம்பவத்தன்று இரவு பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறு நாள் காலை காலை நீண்ட நேரம் ஆகியும் மகள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது கழிவறையில் மாதுரி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சணை கொடுமையால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை புகார் அளித்துள்ள நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஒரு லிட்டர் ஆவின் நெய் எவ்வளவு தெரியுமா..? அதிரடியாக உயர்ந்த விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



