கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் அனுமதித்தது முதல் ஆபரேஷன் செய்ய மாட்டோம். சுகப்பிரசவம் ஆகிவிடும் எனக் கூறி அலட்சியமாக செயல்பட்டனர். அந்த பெண் வலியால் துடித்த போது கூட மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. நான் மருத்துவரா..? இல்லை நீங்க மருத்துவரா..? என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என கூறிவிட்டார்.
வலியால் அலறி துடித்தாள். கொடுமை படுத்தியே கொன்றுவிட்டார்கள். மருத்துவமனையின் அலட்சியமும், பயிற்சி மருத்துவரின் சிகிச்சையும் தான் உயிரிழப்புக்கு காரணம். குழந்தை இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளது. குழந்தையை எங்களிடம் இன்னும் காண்பிக்கவில்லை.. எங்களுக்கு நீதி வேண்டும் என கூறினார்.
Read more: ஷாக்.. இன்றும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.440 உயர்வு..