பெண்களே.! மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.!?

பொதுவாக பெண்கள் எப்போதும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் உருவாகும். எனவே மாதவிடாய் நேரத்திலும் ஊட்டச்சத்துகளை தரும் உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் மாதவிடாய் நேரத்தில் ஒரு சில உணவுகளை சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. மாதவிடாய் காலங்களில் அதிக உப்பு நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் பசியின்மை, வயிறு மந்தம் மற்றும் சோர்வு ஏற்படும்.
2. மைதாவில் செய்யப்பட்ட பிரெட், பிஸ்கட், பாஸ்தா, பீட்சா, பர்கர், புரோட்டா போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
3. குறிப்பாக டீ, காபி, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், இனிப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
4. எண்ணெயில் பொறித்த உணவுகளை உட்கொள்வதால் வயிறு வலி, கால் வலி அதிகரிக்கும்.
5. அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் மார்பு வலி, தலைவலி ஏற்படும்.
6. இஞ்சி, எள் போன்றவற்றில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது நல்லது என்றாலும், மாதவிடாய் நேரத்தில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது அதிகப்படியான இரத்த போக்கை ஏற்படுத்தும். இது போன்ற உணவுகளை எடுத்து கொள்ளாமல் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

English summary: should not eat these foods at menstrual time

Read more : இந்த ஒரு பொடி போதும்.! மலச்சிக்கல் பிரச்சனையை சில நிமிடங்களிலேயே சரி செய்து விடும்.!?

Baskar

Next Post

Bjp: பாஜகவுக்கு தாவும் முன்னாள் அமைச்சர்?... இவர்தான் அந்த முக்கியப் புள்ளியா?... கலக்கத்தில் எடப்பாடி!

Tue Feb 27 , 2024
Bjp: தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்ஜிஆர் காலம் தொடங்கி எடப்பாடி பழனிசாமி காலம் வரை அதிமுக-வுக்கு கொங்கு மண்டலம் பெருமளவு வெற்றியை கொடுத்துள்ளது. அதே நம்பிக்கையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி, வியூகங்கள் […]

You May Like