உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்!. பி.வி. சிந்துவும் வெளியேற்றம்!. இந்தியாவின் சாம்பியன் கனவு தகர்ந்தது!

PVSindhueliminated

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியுடன் முடிவுக்கு வந்துள்ளன. இதில் ஆயுஷ் ஷெட்டி மற்றும் பி.வி. சிந்து ஆகிய முன்னணி இந்திய வீராங்கனை மற்றும் வீரர் இருவரும் போராடி வெளியேறினர்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஷி யுக்கியை முந்தைய சுற்றில் வீழ்த்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் அல்வி ஃபர்ஹானை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயுஷ் 19-21, 11-21 என்ற நேர் செட்களில் போராடித் தோல்வியடைந்தார். முதல் சுற்றில் 14-18 எனப் பின் தங்கியிருந்த ஆயுஷ் 19-18 என முன்னிலை பெற்றும் அதனைத் தக்கவைக்கத் தவறினார். இரண்டாவது சுற்றில் அல்வியின் அசுர வேகமான ஆட்டம் மற்றும் அவரது உடல் தாக்குதல் ஷெட்டியைத் திணறடிக்க, இந்தத் தோல்வியின் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.

மறுபுறம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தங்கப்பதக்க எதிர்பார்ப்பான பி.வி. சிந்து, சீனாவின் வாங் சி யியை எதிர்த்துப் போராடினார். 88 நிமிடங்கள் நீடித்த இந்த நீண்ட போராட்டத்தில் சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியைத் தழுவினார். முதல் சுற்றை இழந்த சிந்து, இரண்டாவது சுற்றில் தன் தாக்குதல் ஆட்டத்தை அதிகரித்து வெற்றியைப் பெற்றாலும், மூன்றாவது சுற்றில் கடுமையான சவாலைச் சந்தித்தார்.

கடைசி சுற்றின் பரபரப்பான கட்டத்தில் சீனாவின் வாங் சி யி தசப்பிடிப்பு காரணமாக மருத்துவ இடைவேளை எடுத்துக் கொண்டார். ஆட்டம் முடிந்த பிறகு பேசிய பி.வி. சிந்து, எதிராளியின் அந்த மருத்துவ இடைவேளை உண்மையான காயத்துக்காக எடுக்கப்பட்டதா அல்லது ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு தந்திரமா என்ற தனது சந்தேக வெளிப்படையாக எழுப்பினார்.

இந்தத் தோல்விகளுடன், சொந்த மண்ணில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு மற்றும் சவால்கள் முழுமையாக தகர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

1newsnationuser5

Next Post

துருக்கி ஆயுதங்களுடன் சோமாலியா அருகே சரக்கு கப்பல் கடத்தல்!. 6 இந்தியர்கள் உட்பட 10 பேர் சிறைபிடிப்பு!

Fri Aug 21 , 2026
சோமாலியாவின் புன்ட்லான்ட் கடற்கரை அருகே துருக்கி நாட்டு ராணுவ ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சிக்கியுள்ளனர். கமரூன் நாட்டு கொடியுடன் இயங்கும் ‘எம்/வி லுடுப்’ (M/V LUTUF) என்ற இந்த சரக்குக் கப்பல், சோமாலியாவின் புன்ட்லான்ட் பகுதியில் உள்ள எய்ல் மாவட்டத்தில் உள்ள மர்ரா என்ற இடத்திற்கு அருகில் திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டு,  நுகால் […]
ship hijacked

You May Like