World Happiness Report 2024: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு.!! இந்தியா எந்த இடத்தில் உள்ளது? முழு விவரம்.!

உலகில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளை பற்றிய அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் மகிழ்ச்சியின் அளவுகள் குறைந்துள்ளன. ஆனால் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மக்களின் மகிழ்ச்சி அதிகரித்திருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டின் மக்கள் அதிகம் மனநிற கருடன் வாழ்வதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையை ஐக்கிய நாட்டு சபையின் ஆதரவு பெற்ற நிறுவனம் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பின்லாந்து நாடு தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பெற்றிருக்கிறது. டென்மார்க் ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீட் அண்ட் போன்ற நாடுகளும் உலகின் அதிக மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் படி வட அமெரிக்காவில் 15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே மகிழ்ச்சி குறைந்திருக்கிறது. இந்த நாடுகளில் வயதானவர்கள் இளைஞர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் கிழக்கு ஆசியா மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தெற்காசியா மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள மக்களிடையே மகிழ்ச்சி குறைந்துள்ளதாகவும் வாய்வு தெரிவிக்கிறது.

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய தரவரிசை தொடங்கப்பட்ட நாளிலிருந்து முதல் முறையாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அமெரிக்கா 23-வது இடத்திலும் ஜெர்மனி 24-வது இடத்திலும் உள்ளது. தாலிப்பான்களால் ஆட்சி செய்யப்படும் ஆப்கானிஸ்தான் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடமான 143 ஆவது இடத்தை பெற்றிருக்கிறது. அங்குள்ள மக்கள் இறுக்கமான மனநிலையுடன் வாழ்வதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கோஸ்டாரிக்கா மற்றும் குவைத் நாடுகள் முதல்முறையாக உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்று இருக்கிறது. லெபனான் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் போர் மற்றும் அரசியல் சூழல் காரணமாக மிகவும் மோசமான புள்ளி விவரங்களை கொண்டுள்ளன. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மிகப்பெரிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து மட்டுமே இடம்பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தரவரிசையானது தனிப்பட்ட நபர்களின் மதிப்பீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி சமூக ஆதரவு ஆரோக்கியமான ஆயுட்காலம் சுதந்திரம் தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் போன்ற முக்கிய மாறுபாடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது ஐரோப்பாவை தவிர மற்ற பிராந்தியங்களில் மகிழ்ச்சியிலும் சமத்துவமின்மை நிலவியதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் எதிர்மறையான உணர்வுகள் அதிகப்படியாக தற்போது சமூகத்தில் வெளிப்படுகிறது எனவும் இந்த ஆய்வறிக்கை சுற்றி காட்டி இருக்கிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலின் தரவரிசையில் கடந்த ஆண்டு போலவே இந்தியா 126 வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவில் வயதான முதியவர்கள் அதிக திருப்தி அடைந்த வாழ்க்கையை வாழ்வதாகவும் இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. வயதான ஆண்கள் வயதான பெண்களை விட முழுமையான திருப்தி அடைந்த வாழ்க்கையை வாழ்வதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தியாவில் வயதான பெண்கள் ஆண்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக உறவுகள், சமூக ஈடுபாடு, வாழ்க்கை  ஏற்பாடுகள், கல்வி, வருமானம், சாதி மற்றும் மதம் உள்ளிட்ட காரணிகள் இந்தியர்களிடையே வாழ்க்கை திருப்தி மற்றும் மகிழ்ச்சியை பறிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதிகமான வயதானவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை அடுத்து இந்தியா இருக்கிறது. சீனாவில் 250 மில்லியன் மக்கள் 60 வயதை தாண்டி அவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 140 மில்லியன் மக்கள் 60 வயதை தாண்டியவர்களாக உள்ளனர். அதிக வருமானங்களை கொண்ட நாடுகளில் மட்டும்தான் மகிழ்ச்சி மற்றும் திருப்தி இருப்பதாக கூறப்பட்ட கருத்துக்களை இந்த ஆய்வு அறிக்கை மறுத்து இருக்கிறது.

உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள்:

பின்லாந்து

டென்மார்க்

ஐஸ்லாந்து

ஸ்வீடன்

இஸ்ரேல்

நெதர்லாந்து

நார்வே

லக்சம்பர்க்

சுவிட்சர்லாந்து

ஆஸ்திரேலியா

Read More: சொத்து பத்திரத்தில் பிழையா..? அசால்ட்டா விட்றாதீங்க..!! மிகப்பெரிய சிக்கல்..!! உடனே இதை பண்ணுங்க..!!

Next Post

’எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும்’..!! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Wed Mar 20 , 2024
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து […]

You May Like