டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் , 5 அடி நீள பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுககுள் தண்ணீர் பாம்பு ஊர்ந்து உள்ளே வந்துள்ளது. இதையடுத்து பாதுகாவலர்கள் என்.ஜி.ஓவுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் பாம்பு அங்கிருந்த ஒரு மரப்பெட்டிக்குள் சென்றுவிட்டது. வனத்துறை சார்பில் வந்த இருவர் அந்த பாம்பை பிடித்தனர்.
வன உயிரின சட்டப்படி இது போன்ற ஆசிய தண்ணீர் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மழைக்காலத்தில் 70க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
பிடிபட்டா பாம்பை நீர்வாழ் பகுதியில் விட்டுள்ளனர். இந்த பாம்பு விஷமற்றது என்பதால் பாதிப்பு இல்லை. நீர்நிலைகள், குளம் , குட்டை ,ஓடை , ஏரிகளில் இந்த வகை பாம்பு அதிகம் தென்படும். மேலும் பாம்பை அடிக்காமல் எங்களைப் போன்ற அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தது உயிரினத்தின் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்துகின்றது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.