“ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தானே..” CM விஜய்க்கு Ex. சபாநாயகர் பதிலடி..!

vijay appavu 2

தமிழக முதல்வர் விஜய் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. பயமின்றி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..


பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது.. பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம் தான்..

போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.. 2026 மே மாதம் 10-ம் தேதி இந்த பிரச்சனை புதிதாக வந்துவிடவில்லை.. இது பல மாதங்களாக இருக்கும் பிரச்சனை.. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது. இதை பல ஆண்டுகளாக கண்டுக்காமல் விட்டது யார் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.. அது உங்களுக்கே நன்றாக தெரியும்.. அதை பற்றி இப்போது பேசி எந்த பலனும் இல்லை.. பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.” என்று பேசியிருந்தார்..

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரிக்க முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம் என மறைமுகமாக பழி போடும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே, தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும் முதல்வர் விஜய் சிங்கப்பெண் அதிரடி படை தொடக்க விழாவில் பேசிய வீடியோவையும், மாஸ்டர் படத்தில் மது பானம் குடிக்கும் காட்சியையும், அழகிய தமிழ்மகன் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்..

RUPA

Next Post

மணிக்கு 320 கி.மீ வேகம், வெறும் 9 நிமிடங்களில் 50 கி.மீ பயணம்..! 2027-க்குள் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை..!

Wed Jun 10 , 2026
இந்தியர்களின் புல்லட் ரயில் பயணக் கனவு நனவாகவுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான புதிய கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளபடி, சூரத் மற்றும் பிலிமோரா இடையிலான முதல் 50 கி.மீ வழித்தடம் 2027-ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, மும்பை-அகமதாபாத் இடையிலான முழு புல்லட் ரயில் வழித்தடமும் 2029-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கி.மீ பயணத்தை வெறும் […]
bullet train

You May Like