கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது.
கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பணி செய்வோருக்கு இடையூறு ஏதும் இல்லாத வகையில், இந்தத் தீவிர பயிற்சி வகுப்பு கட்டமைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு கடல்சார் சட்டம் அல்லது கொள்கை அறிவு முன் நிபந்தனையாக இருக்காது. இந்தத் துறையில் விருப்பம் உள்ள அனைவரும் அணுகக் கூடியதாக இருக்கும்.விருப்பம் உள்ளவர்கள் 2026 ஜனவரி 30-க்குள் https://code.iitm.ac.in/mbadmsc என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



