முக்கிய அறிவிப்பு..! மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான MBA படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…!

college admission 2025

மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப் படிப்பு பயில்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த படிப்பில் சேர விரும்புவோர் பல்கலைக் கழகத்தின் இணையதளம் (www.tnjfu.ac.in) மூலமாக அக்டோபர் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பு மதிப்பெண், பெற்ற விருதுகள், சிறப்பு பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்பு, பணி அனுபவம், விளையாட்டு, என்எஸ்எஸ், என்சிசி செயல்பாடு, நேர்காணல் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நவம்பர் 17-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

Bank Holidays | அக்டோபர் மாதம் இந்த நாட்களில் வங்கி பக்கமே போகாதீங்க..!! இத்தனை நாட்கள் விடுமுறையா..?

Mon Sep 29 , 2025
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் […]
Bank Holiday 2025

You May Like