2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள‌ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

hajj

2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் (online) விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கையில்; , 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.

மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை.. சுய வைத்தியம் பார்த்த பெற்றோர்..!! பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!!

Wed Oct 29 , 2025
ஆவடி பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா (31). இவர்களது ஒரு வயது மகள் அனன்யாவிற்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்துள்ளது. குழந்தையின் பெற்றோர், அருகில் உள்ள மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் […]
Fevr 2025

You May Like