மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை துறை சார்ந்த அதிகாரிகள் மத்திய ஆவணப் பராமரிப்பு முகமைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2025 ஜனவரி 24-ம் தேதி அன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
ஏப்ரல் 1-ம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ மத்திய அரசு சேவையில் புதிதாக சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளவும் இந்தப் படிவம் வகை செய்கிறது.