“இக்கட்டான சூழலில் கை கொடுத்தீர்கள்..” காதர் மொய்தீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த CM விஜய்..!

vijay kadhar moideen

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..


முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், நேற்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக முதல்வர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்..

தொடர்ந்து இன்று சபாநாயகராக ஜே.சிடி. பிரபாகர் தேர்வானார்.. புதிய சபாநாயகருக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் முதல்வர் விஜய்யும் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்..

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார்.. சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஜய் அக்கட்சி தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. விஜய்யின் தவெக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய் சந்தித்தார்.. மேலும் புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் நிலையில் இன்று காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. அப்போது பேசிய விஜய் ” இக்கட்டான சூழலில் கை கொடுத்தீர்கள்.. நன்றி.. என்னை எப்போதும் நம்பலாம்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக நேற்று முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரை சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : “தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.. மீறினால்!” – கட்சி தலைமை எச்சரிக்கை..!

RUPA

Next Post

"ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பிறகும் திருந்தவில்லை..!" - உதயநிதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

Tue May 12 , 2026
"Even after being thrown out of power, he didn't change..!" - Vanathi Srinivasan condemns Udhayanidhi's speech..!
vanathi srinivasan 2025

You May Like