இந்தியாவில் சமீப காலமாக, திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்களுக்கு நேரும் சித்திரவதைகளால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை பல மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. இது சமூகநல ஆர்வலர்கள் மற்றும் மகளிர் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால் பல பெண்களுக்கு அந்த கனவு, சித்திரவதை, மன அழுத்தம், குடும்ப அத்துமீறல்கள் எனும் நிஜத்தை எதிர்கொள்ளும் ஒரு பயங்கர வாழ்வாக மாறிவருகிறது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் தற்போது உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் சௌமியா காஷ்யப் என்ற இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், போலீஸ்கான்ஸ்டபில் ஆன தன்னுடைய கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். என் கணவர் அனுராக்சிங் மீண்டும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அவரது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவர் ரஞ்சித் வழக்கறிஞராக இருக்கிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்திரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிட்டனர். அவர்களின் சித்திரவதையால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என் தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என்று அந்த பெண் அழுதபடி அந்த வீடியோவில் பேசிய தற்கொலை செய்துகொண்டார்.
தூக்கு கயிருக்கு முன்பே நின்று கொண்டு அந்தப் பெண் வெளியேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: உடற்பயிற்சி மட்டும் போதாது.. இயற்கையாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளின் லிஸ்ட் இதோ..!!