சென்னை கொரட்டூர் பகுதியில் சேர்ந்த 23 வயது இளம்பெண் வேலை தேடி பல பகுதிகளில் அலைந்து திரிந்து இருக்கிறார். பெரியபாளையம் பகுதியில் இவர் பலரை சந்தித்து வேலை கேட்டு இருக்கின்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மௌலி, கார்த்திக் என்ற 2 இளைஞர்களும் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது வேலை தேடி அலைவதாக தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண்.
பின்பு வீட்டு வேலை செய்வதற்கு பெண் தேவைப்படுகிறது என அந்த இளைஞர்கள் தெரிவித்ததால் அந்த வேலைக்கு அந்த பெண் சம்மதிக்கிறார். அப்படியெனில் எங்களுடன் வாருங்கள் என்று அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். ஒரு விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று தங்க வைத்து அங்கே கார்த்திக், மௌலியுடன் குகன் என்ற இளைஞனும் சேர்ந்து கொண்டார். மூவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன அந்தப் பெண்மணி அதற்கு சம்மதிக்காமல் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். உடனே மூவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் அந்த இளம் பெண் அவர்களிடம் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
அதன் பிறகு விடுதியில் இருந்து அந்த இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக காவல்துறையின் ரோந்து வாகனம் வந்திருக்கிறது. இதுதான் சரியான சமயம் என நினைத்த அந்த இளம் பெண் திடீரென்று ரோந்து வாகனத்திற்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தார். அதை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிய காவல்துறை அதிகாரியிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
ஆகவே காவல்துறையினர் அந்த இளைஞர்களை நோக்கி ஓடிவந்தபோது மௌலி தப்பி சென்று விட்டார். இதில் குகனும், கார்த்திக் என்ற இளைஞரும் சிக்கி உள்ளனர். அந்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பிச்சென்ற மவுலி என்ற இளைஞரை விடுவதற்கு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.