செங்கோட்டையன், ஓ.பி.எஸ் ஆகியோர் பூஜ்ஜியங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதையடுத்து நேற்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்..
இதனால் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், பூஜ்ஜியங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கொள்கை, விசுவாசத்தில் இருந்து விலகும் போது செல்வாக்கு மிக்கவர்களும் பூஜ்ஜியங்களாகவே பார்க்கப்படுவர். அதிகாரங்களும் பதவிகளும் இல்லாததால் சிலர் அதிமுகவை அழிக்க வியூகம் அமைத்து வருகின்றனர்..
தொண்டர்களாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் தற்போது அதிமுகவை அழிக்க முயன்று வருகின்றனர்.. இதற்காக திட்டமிட்ட நாடகத்தை பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் அரங்கேற்றி உள்ளனர்..
பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்யங்கள் அமைத்த வரலாறு இல்லை.. நாடகத்திற்கு திரைக்கதை திரைக்கதை எழுதியவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார். தங்களை உருவாக்கிய இயக்கத்தை சிதைத்துவிட்டு வீதியில் நிற்கின்றனர்.. பசு தோல் போர்த்திய புலி போல் துரோக நாடகத்தை அரசியல் களத்தில் நடத்தினாலும் தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்..” என்று தெரிவித்தார்..
Read More : கரூரில் சோகம்..!! நிலைதடுமாறிய மினி லாரி..!! சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்..!!



