10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டாசயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm. ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும்.
பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (Centre for Outreach and Digital Education – CODE) முதன்மையான அவுட்ரீச் முயற்சியாகும். பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, வளர்ந்து வரும் துறைகளை ஆராய்ந்து, அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் பாதைகள் குறித்து நன்கு அறிந்த முடிவுகளை எடுக்க இந்த முன்முயற்சி அதிகாரமளிக்கிறது.
நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில் 3 தொகுதிகளாக இந்த பாடத்திட்டங்கள் நடத்தப்படும். இதனால், பள்ளிகளும், மாணவர்களும் ஆண்டுதோறும் மூன்று பாடத்திட்டங்களைப் பெற முடியும். ஏற்கனவே 2,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்திருப்பதால், 50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். ஐஐடி தற்போது பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read more: அஜித் படுகொலை வழக்கு… அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சி…? அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…!