தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

indian railway

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங்; ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைமேடைகள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக‌ஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மூன்றாவது கட்டமாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, இந்த தூய்மைப் பணிகளில் 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் தென்மாவட்டம் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. எப்போது இருந்து இயக்கப்பட உள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Vignesh

Next Post

சோகம்!. தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி!. 200 பேர் படுகாயம்!. எத்தியோப்பியாவில் சோகம்!

Fri Oct 3 , 2025
எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். […]
ethiopia church 36 kills

You May Like