Central Reserve Police Force (CRPF) அமைப்பில் காலியாக உள்ள 9,175 கான்ஸ்டபிள் (Technical/Tradesmen) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றான CRPF-ல் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் நாடு முழுவதும் இருந்து தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காலியிட விவரம்:
மொத்த காலியிடங்கள்: 9,175
ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
- குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்
- தொழிற்பிரிவு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அனுபவம் தேவை
- ஓட்டுநர் பணிக்கு: கனரக ஓட்டுநர் உரிமம் அவசியம்
- Mechanic Motor Vehicle: ITI சான்றிதழ் தேவை
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21-27க்கு கீழ் இருக்க வேண்டும். அன்றுஇடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். முன்னாள் ராணுவத்தினர் 3 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
சம்பளம்: சம்பள நிலை – 3 (ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரை)
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/hi/index இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 20ம் தேதி தொடங்கிய நிலையில் மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Read more: குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தாக்கும் கல்லீரல் நோய்.. என்ன காரணம்..? மருத்தவர்கள் எச்சரிக்கை..!



