ஐஸ்கட்டி வாங்க வந்த இடத்தில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சென்னையில் ஐஸ்கட்டி வாங்க சென்ற இடத்தில் சரக்கு வேன் மோதி 15 வயது மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கடைகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூரில் தன்னுடைய வேலையை நிறுத்தி விட்டு ஐஸ்கட்டியை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது பலஞ்சூர் எம்ஜிஆர் தெருவை சார்ந்த கரும்புச்சாறு வியாபாரியான ரகு என்பவரது மகன் அஜய் குமார் என்ற 15 வயது சிறுவனை தனது மோட்டார் சைக்கிளில் ஐஸ்கட்டி வாங்குவதற்காக அனுப்பி இருக்கிறார். அஜய் குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஐஸ்கட்டி வாங்குவதற்காக வேண்டி அருகில் நின்று இருக்கிறார் அஜய்குமார் அப்போது மதுரவாயில் இருந்து மின் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் சென்ற சரக்கு வேனை சத்யா என்பவர் ஓட்டி வந்தார்.


தண்டலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஐஸ் கட்டி ஏற்றி வந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அஜய் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீன் வண்டியை ஓட்டி வந்த சத்யா மற்றும் ஐஸ்கட்டி ஏற்றி வந்த சுரேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்ட பொதுமக்கள் தண்டலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை சிறுவன் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

1newsnationuser5

Next Post

முதன்முறையாக இன்ஸ்டாவில் இணைந்த நடிகர் விஜய்.. முதலில் போட்ட பதிவு இதுதான்..

Sun Apr 2 , 2023
நடிகர் விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ளார்.. வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார்.. லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டியை தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்.. இது […]
thalapathy vijay makes his insta debut

You May Like