2024 ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை…! தமிழக அரசு வெளியிட்ட புதிய பட்டியல்…!

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் வரும் 2024 ஆண்டில் பொது பண்டிகை அல்லது விடுமுறை நாட்கள் எவை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொங்கல், தைப்பூசம், குடியரசுத் தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 12 பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வெள்ளிக்கிழமை அன்று வார விடுமுறை நாட்களும் உள்ளன.

Vignesh

Next Post

பதவி ஏற்ற அடுத்த நொடி...! திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனை செய்ய தடை...! ம.பி அரசு போட்ட உத்தரவு...

Thu Dec 14 , 2023
பொது இடங்களில் மத வழிபாட்டு இடங்களில் கட்டுப்பாடற்ற ஒலிபெருக்கிகள் வைக்க தடை, அதேபோல திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு முதல் முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர்கல்வி அமைச்சரும், மூன்று முறை உஜ்ஜைன் எம்.எல்.ஏ.வுமான மோகன் யாதவ், மத்திய பிரதேசத்தின் 19வது முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி […]

You May Like