ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு!!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் எடுத்து 187 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது.

உலககோப்பை டி20 போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா விளையாடி வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இணை ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார் (51), பின்னர் களம் இறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். 25 பந்துகளில் 26 ரன்கள் எடத்த நிலையில் அவுட் ஆனார். சூர்ய குமார் யாதவ் (61), ரிஷப் பண்ட்(3), ஹர்திக் (18) என இந்திய வீரர்கள் 186 ரன்கள் குவித்தனர்.

இலக்கை எட்டுமா ஜிம்பாப்வே?: 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. 8.4 ஓவரின் முடிவில் 42 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரெஸ்லி (0), கிரெய்க் எர்வின்(13), ரெகிஸ் சகாபாவா (0), சீன் வில்லியம் (11), சிக்கந்தர் ராசா (3)டோனி முனயோங்கா (5) என சொற்ப ரன்களே எடுத்து விளையாடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் எடுத்துள்ளது இதனால் இலக்கை அடைவது சற்று கடினம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Next Post

பேண்ட் அணியாததால் ரூ.500 அபராதம்… சரமாரி கேள்வியால் போலீஸை மடக்கிய ரிப்போர்ட்டர்…!!

Sun Nov 6 , 2022
லாரி ஓட்டுனர் சீருடை பேண்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்த டிராபிக் போலீஸை சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. சென்னையில் வாகன சட்டங்களை மீறியதற்காக பல்வேறு வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீஸ் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை அழைத்து டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் வசூலித்துள்ளார். சீருடைக்கு பேண்ட் அணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக  ரூ.500 அபராதம் விதித்துள்ளார் அந்த […]

You May Like