தமிழக முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் 19,476 போலி வாக்காளர்கள்…! பாஜக எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு…!

election mk Stalin 2025

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 19,476 சந்தேகத்திற்குரிய போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீடு எண் 11-ல் மட்டும் 30 போலி வாக்காளர் உள்ளனர். பூத் நம்பர் 157 இல் மட்டும் ரபியுல்லா என்ற நபர் மூன்று முறை உள்ளார். இது தேர்தலில் ஜெயிக்க உருவாக்கபட்டதா..? என பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பி உள்ளார்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போலி வாக்காளர்கள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில தினங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்ாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டார். அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19 ஆயிரத்து 476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை எனத் தெரிவித்தார். கொளத்தூரில் 9 ஆயிரத்து 133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஒரே வாக்குச்சாவடியில் ஒருவர் 3 முறை வாக்களித்திருப்பது தவறுதலாக நடந்ததா.‌.? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா.‌.? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். போலி வாக்காளர்களைக் காக்கவே ஸ்டாலின், ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு...! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு

Sat Aug 16 , 2025
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் […]
Tn Govt 2025

You May Like