“தந்தை, மகன் இருவருடனும் உல்லாசம்”; ஹேண்ட் பேக்கில் இருந்த ஆணுறையால் சிக்கிய பெண்..

1784010996 6a55d8f47f3a1

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது செல்போனில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான சுனிதா தேவி என்பவருக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. கணவனை இழந்த சுனிதா தேவி, தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து ஒப்புக்கொண்ட சுனிதா, ரவியின் மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம், ரவியின் உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சுனிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்தார். சுனிதா தேவி, ரவியுடன் மட்டுமல்லாமல், 48 வயதான அவரது தந்தை ராஜேஷ் சாஹுவுடனும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். ஒரே வீட்டில் தந்தை, மகன் என இருவருடனும் சுனிதா இரகசிய வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் . ஒரு நாள் சுனிதாவின் ஹேண்ட் பேக்கிற்குள் ஆணுறை இருந்துள்ளது. இதனைக் கண்ட ரவி, உனக்கு எதற்கு ஆணுறை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது சுனிதா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், தனது தந்தையுடனும் சுனிதா கள்ளத்தொடர்பில் இருப்பதை ரவி கண்டுபிடித்துள்ளார். மேலும், ரவி இந்த உண்மையை வெளியே சொல்லிவிடுவார் என்று அஞ்சிய சுனிதா, அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, ரவி தினமும் சாப்பிடும் தின்பண்டங்கள் மற்றும் பழங்களில் சிறிது சிறிதாக விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதனால், ஒருகட்டத்தில் ரவியின் உடல் நிலை மிகவும் மோசமாகி அவர் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அவரை காப்பாற்றாமல் சுனிதா வீட்டின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தற்போது சுனிதா தேவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘தாய் வேண்டாம்… மனைவி போதும்!’ மனைவிக்காக தாய்க்கு விஷம் கொடுத்த மகன்…

Saranya

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்… நாவல் பழத்தின் அசர வைக்கும் நன்மைகள்!

Tue Jul 14 , 2026
நாவல் பழம் என்பது இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் பருவகாலப் பழங்களில் ஒன்றாகும். கருநீலம் அல்லது அடர் ஊதா நிறத்தில் காணப்படும் இந்தப் பழம், இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கலந்த தனித்துவமான சுவையால் பலரையும் கவர்கிறது. சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்கும் பழமாகவும் இது அறியப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், சமீபத்திய சில ஆராய்ச்சிகளிலும் நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் பழத்தில் […]
screenshot10731 1687175867

You May Like