தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தவெகவுக்கு இது முதல் சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தலை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் அரசியலில் நுழைந்த பிறகு விஜய் வெள்ளைச் சட்டை சந்தன கலர் பேன்ட் தான் அணிகிறார். நாளை வாக்குப்பதிவின் போது விஜய்யின் டிரேட் மார்க் வெள்ளை சட்டை சந்தன கலர் பேன்ட் அணிவதற்கு தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நாளை தவெகவுக்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட அக்கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு வீடியோவை வெளியிட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு வாக்களிப்பதை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Read more: PPF: மாதம் வெறும் ரூ. 5,000 முதலீட்டில், லட்சக்கணக்கில் பணம் உங்கள் கையில்! வரி விலக்கும் உண்டு.



