நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் வழங்கப்படும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
உயர்கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.
மேலும், உயர்கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை – அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கல்லூரிகளுக்கு 10 சதவீத இடமும் கூடுதலாக வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!