2026 சட்டமன்றத் தேர்தல்… 68,000 டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பு…! CM ஸ்டாலின் கடிதம்

MK Stalin dmk 1

இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை மக்கள் உறுதிசெய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்துள்ளனர். அவர்கள், அவரவர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதிசெய்து, ஓரணியில் தமிழகத்தைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.

மாநிலக் கட்சியான திமுக, இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் திமுக தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதி மிக்கது. இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

RTO-க்கு செல்ல வேண்டாம்.. உங்கள் வாகன RC-ஐ வீட்டிலேயே டவுன்லோடு செய்யலாம்.. எப்படி தெரியுமா?

Sun Jun 29 , 2025
Let's now see how to download RC through official government sites.
AA1GmQOu

You May Like