2026 சட்டமன்ற தேர்தல்… மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்…‌! அதிமுக அதிரடி மூவ்…!

admk 2025

அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்வாகிகளை தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்பாளர்​கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

இதன் நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் திமுக ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக்கூற வேண்டும். மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்களை விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும்.

பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்காக, கட்சி ரீதியிலான ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்பாளர்கள் அனைவரும், அவரவர் மாவட்டங்களுக்கு சென்று, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பாக நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி களப்பணி ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

70 ஆண்டுகால பயணம்!. கின்னஸ் புத்தகத்தின் உரிமையாளர் யார்?. அவர் எப்படி பணம் சம்பாதிக்கிறார்?.

Tue Sep 2 , 2025
கின்னஸ் உலக சாதனைகள் இன்று உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான புத்தகங்கள் மற்றும் பிராண்டுகளில் ஒன்றாகும். இதன் முதல் நகல் 1955 இல் அச்சிடப்பட்டது, அதன் பின்னர் இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 70 ஆண்டுகால இந்த பயணத்தில், கின்னஸ் சாதனை புத்தகம் வெறும் புத்தகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஆனால் இப்போது அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சமூக ஊடக நேரடி நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது. அது […]
guinness world record 11zon

You May Like