2026 தேர்தல் திமுக வரலாற்றில் ஒரு மோசமான தேர்தலாக இருக்கும் என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மறுபுறம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.
இதற்கிடையே தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக அண்ணாமலை வருகை தந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, போலீசார் ஒருதலை பட்சமாக இல்லாமல் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுனரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் நீதி மையம், திமுக கூட்டணியில் இருப்பதால் ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுக அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் திமுக கீழே போக ஆரம்பிக்கிறது. திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. 8 மாதம் இருக்கு. 2026 தேர்தல் திமுக வரலாற்றில் அவர்களுக்கு ஒரு மோசமான தேர்தலாக இருக்கும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று எல்லாவற்றிலும் திமுக கோட்டை விட்டுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
Read more: இனி ரயில் டிக்கெட் கட்டணத்தை EMI மூலம் செலுத்தலாம்!. புதிய வசதி அறிமுகம்!. இந்திய ரயில்வே அதிரடி!