2ஆம் கட்ட வாக்குப்பதிவு 1 மணி நிலவரம்: கர்நாடகா 38.23%, கேரளா 39.26% வாக்குள் பதிவு…

மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தற்போது மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருக்குறது. 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திரிபுராவில் 54.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்த படியாக மணிப்பூரில் 54.26 சதவிகித வாக்குகளும், சத்தீஸ்கரில் 53.09 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக மகாராஷ்டிராவில் 31.77% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

2ஆம் கட்ட வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி நிலவரப்படி:
அசாம் – 46.31%
பீகார் – 33.80%
சத்தீஸ்கர் – 53.09%
ஜம்மு & காஷ்மீர் – 42.88%
கர்நாடகா – 38.23%
கேரளா – 39.26%
மத்தியப் பிரதேசம் – 38.96%
மகாராஷ்டிரா – 31.77%
மணிப்பூர் – 54.26%
ராஜஸ்தான் – 40.39%
திரிபுரா – 54.47%
உத்தரப் பிரதேசம் – 35.73%
மேற்கு வங்கம் – 47.29%

Kathir

Next Post

MS Dhoni | " மேட்ச் நடக்கிற நாள்ல தோனி லேட்டா தான் எழும்புவார்; அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…" ருத்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்.!!

Fri Apr 26 , 2024
MS Dhoni: 2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 41 லீப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் தகுதி சுற்றிற்காக அணிகள் தீவிரமாக போராடி வருகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த வருட ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய சிஎஸ்கே அணி கடந்த சில போட்டிகளில் […]

You May Like